Sunday, 10 January 2021

அறிவோம் ஆயிரம் 2

நிலையாகத் தன்னிடம் நிலைத்திருப்பவையும்
என்றும் நிலைத்திருப்பதில்லை.
இதனை உணர்ந்துகொண்டு ஏதாவது செய்ய நினைத்தால்,
என்றும் நிலையாக தன்னை ஒன்றிக்கிடக்கக் கூடிய
அறச் செயல்களைச் செய்ய வேண்டும்.
வாழ்நாள் ஒவ்வொரு நாளாகக் கழிந்துகொண்டிருக்கிறது.
இப்படி வாழ்நாளை அழித்துவிட்டு
உன் உடலையும் உயிரையும் வேறுபடுத்தும் கூற்று
உன்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

பாடல்

'நின்றன நின்றன நில்லா' என உணர்ந்து, ஒன்றின ஒன்றின வல்லே, செயின், செய்க சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்து, உடன் வந்தது வந்தது, கூற்று.    

நாலடியார்.